இலங்கையருக்காக லண்டனில் போராட்டத்தில் குதித்த புலம்பெயர் தமிழர்கள்
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தில் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மதியம் முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்
குறித்த போராட்டத்தில்,
அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மை நிலையினை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும், இராணுவ அபகரிப்பிலிருக்கும் தமிழ் நிலங்களை மீள தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்,

கல்வி மற்றும் சுகாதரம் தனியார் மயப்படுத்தபடுத்தல் நிறுத்தப்பட வேண்டும், சுதந்திரமான வெளிநாட்டு போர் குற்ற விசாரணை நடைபெற வேண்டும், வெளியிடப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதோடு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணை உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்,
அனைத்து இரகசிய சித்திரைவதை முகாம்களும் மூடப்படல் வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.