இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் இலங்கைக்கு வருகை
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் அனிஷ் குமார் இரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, இவர் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பிரதமரின் செயலாளர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகத்தில் உட்கட்டமைப்புத் திட்டங்களைக் கையாளும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்காக பலன்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதி சக்தி திட்டமானது உள்கட்டமைப்பு வளர்ச்சி, நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்களுக்கு ஊக்கமளித்தல், பொருளாதார வளர்ச்சியை தூண்டுதல் என்பவற்றிற்கு உதவுகிறது.
இது புவியியல் தகவல் முறைமை (GIS) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல், ஒத்திசைக்கப்பட்ட செயல்படுத்தல் மற்றும் திட்ட கண்காணிப்பு ஆகியவற்றிற்கான தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை எளிதாக்குகிறது.