இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச பயணிகளை வரவேற்க தயாராகும் இந்தியா
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து வரும் 27 ஆம் திகதி முதல் தொடங்குகிறது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அதில், முக்கியமானதாக, அதே ஆண்டின் மார்ச் 23 ஆம் திகதி சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது.
அதன்பிறகு, கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, அடிக்கடி சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை மத்திய அரசு நீடித்து வந்தது. ஒப்பந்த அடிப்படையில், 35 நாடுகளுக்கு மட்டும் சர்வதேச சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், வரும் 27 ஆம் திகதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.