25 ஆண்டுகள் அரசியல் தலைவராக பிரதமர் மோடி சாதனை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 25 ஆண்டுகள் ஒரு அரசின் தலைவராக சாதனை படைத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2001ம் வருடம் அக்டோபர் 7ம் தேதி குஜராத்தின் முதல்வராக மோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மூன்று முறை அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார்.. அதன்பின் 2014ம் வருடம் மே 26ம் தேதி பிரதமர் பதவியேற்றார். தற்போது வரை அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

அதாவது தொடர்ந்து 25 ஆண்டுகள் ஒரு அரசின் தலைவராக (மாநில முதல்வர் முதல் பிரதமர் வரை) மக்கள் பணியாற்றி பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார் .
இதையடுத்து அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், 25 ஆண்டுகள் நிறைவடந்ததையடுத்து டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
‘பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.. இன்று நான் எந்த நிலையில் இருந்தாலும், எந்த பதிவு வகித்தாலும் அதற்கான பங்களிப்பு மக்களுக்கு உரியது.
பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி.. இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அதன் அரசமைப்புச் சட்டத்துக்கும் மரியாதை செலுத்துகிறேன்..25 ஆண்டுகள் பதவியில் நீடிக்க மக்களின் ஆசியே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.!