பசிலின் கோரிக்கைக்கு செவி சாய்த்த இந்தியா
இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக 1.9 பில்லியன் டொலர் கடன் உதவி வழங்குவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிதியானது தனிப்பட்ட மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள 100 கோடி டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் 50 கோடி டொலர் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளவும் 40 கோடி டொலர் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கைமாற்று கடன் அடிப்படையில் வழங்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளை இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரிடம், இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்த கோரிக்கையின் பலனாக இந்த நிதி கிடைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.