மகளுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! இணையத்தில் கண்கலங்க வைத்த புகைப்படம்!
மகள் மூளையில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நிலையில் தன் மகளுக்கு தைரியம் கொடுக்கவும். அவளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவிக்கும் வண்ணம் அவரது தந்தை தனது தலையை ஷேவ் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரது தலைமுடியை ஷேவ் செய்துள்ளனர். இதேவேளை, அறுவை சிகிச்சை செய்த பின்னர் சிறுமிக்கு தையல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகளுக்கு தைரியம் கொடுக்கவும். அவளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவிக்கும் வண்ணம் அவரது தந்தை தனது தலையை ஷேவ் செய்து தலையில் தையல் போட்டது போல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
The little baby had brain surgery and her dad did the same to his own hair! Made me cry! ❤️pic.twitter.com/S5VDhK8HPn
— Figen (@TheFigen) January 25, 2022
இதேவேளை, மகளின் நெற்றியோடு நெற்றியாக முட்டி அன்பை வெளிப்படுத்தும் ஒரு பாசக்கார தந்தையின் புகைப்படம் இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்துள்ளது.
மேலும் இந்த புகைப்படத்தை துருக்கியை சேர்ந்த ஃபிகன் என்ற ஆசிரியர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் அவர் தெரிவித்தது, சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய அப்பாவும் அதுபோலவே ஷேவ் செய்துக்கொண்டுள்ளார். என் கண்கள் கலங்குகிறது. எனப் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை ஏராளமானார் ரீட்வீட் செய்துள்ளனர்.