இந்தியாவில் தற்போது இதற்குத்தான் அதிகபட்ச வரி!
இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதி அறிக்கையில் கிரிப்டோகரன்சி சொத்தின் பரிமாற்றத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01-02-2022) இடம்பெற்ற2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால், Cryptocurrency-யை எப்படி அனுமதிக்கும், அதற்கான நெறிமுறைகளை இன்றும் மத்திய அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில் Cryptocurrency டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், அதற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
இந்தியாவில் GST வரி அமலில் இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரியில் உச்சப்பட்சமே 28 சதவீதம்தான். அதையும் தாண்டி 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேவேளை, ‘‘டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் மூலம் கிடைக்கும் எந்தெவொரு வருமானத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். கையகப்படுத்துதலுக்கான செலவைத் தவிர வேறு எந்தக் கழிவுகளும் வரி குறைக்கப்படாது’’ என தெரிவித்துள்ளார்.