வைபவ் சூரியவன்ஷியுடன் இலங்கை வந்தடைந்தது இந்திய A அணி
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கு முன்னதாக நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய 'ஏ' அணி இன்று (05) முற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
அண்மையில் ஐ.பி.எல் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது வென்ற வைபவ் சூரியவன்ஷி இந்த அணியில் விளையாடவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய அணியின் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி தம்புள்ளையில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
அதனைத் தொடர்ந்து காலி மைதானத்தில் இரண்டு, ஒருநாள் போட்டிகளிலும் இந்த அணி விளையாடவுள்ளது.
பரபரப்பான ஆட்டங்களைக் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படும் இத்தொடரில், தமது திறமைகளை வெளிப்படுத்தி சவாலளிப்பதற்கு இந்திய 'A' அணி தயாராகவுள்ளது.