அதிகரிக்கும் சுவாச பிரச்சினைகள்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என விசேட வைத்தியர் நிபுணர் நெரஞ்சன் திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
சுவாசப் பிரச்சினைகள்
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,
முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களினூடாக அவர்களின் வீட்டில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த நிலை பரவக்கூடும்.
[714R3R]
அத்துடன், வீடுகளில் இருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போதைய காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் விசேட வைத்தியர் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.