யாழில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்; இருவர் மருத்துமனையில்
யாழ்.பொன்னாலை பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் இனந்தொியாத நபர்களின் வாள்வெட்டுக்கு குறித்த நபர்கள் இலக்காகியுள்ளனர்.
குறித்த சசம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை யாழில் அணம்மைகாலமாக வழிப்பறி சம்பவங்களும் , வன்முறை சமபவங்கள் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுகின்றது.