இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மேலும் 8 பேர் பலி
இலங்கையில் கொரோனா தொற்றுனால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் ஒரே நாளில் ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் முதன் முறையாக ஒரே நாளில் ஆயிரம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனையடுத்து இலங்கையில் 103,472 பேர் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளது.