பொருளாதார வீழ்ச்சியால் அதிகரித்த பணவீக்கம்
மத்திய வங்கியின் கூற்றுப்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CNN, 2013 = 100) ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், 2022 மார்ச்சில் 18.7 சதவீதமாக இருந்த பிரதான பணவீக்கம் ஏப்ரல் 2022 இல் 29.8 சதவீதமாக அதிகரித்தது.
மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2022 இல் உணவு மற்றும் உணவு அல்லாத வகைப்பாடுகளில் மாதாந்திர அதிகரிப்புகளால் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் இத்தகைய அதிகரிப்பு தூண்டப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.
உணவுப் பணவீக்கம் மார்ச் 2022 இல் 30.2 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் 2022 இல் 46.6 சதவீதமாக உயர்ந்தது, அதே சமயம் உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஏப்ரலில் 13.4 சதவீதத்திலிருந்து 22.0 சதவீதமாக உயர்ந்தது.