விலை அதிகரிப்பால் கட்டட நிர்மாணத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு!
இலங்கையில் இரும்பு, சீமெந்து உள்ளிட்ட கட்டட நிர்மாணப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கட்டட நிர்மாணத் தொழிற்துறை பின்னடைவை சந்தித்துள்ளது.
தமது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், கட்டுமாணத் தொழிற்துறை ஈடுபடுபவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மின்னியல் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட கட்டுமாணத் தொழிற்துறையுடன் தொடர்புடைய இலட்சக் கணக்கானகானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், சீமெந்து, இரும்பு, கருங்கல், அலுமினியம் உள்ளிட்ட கட்டட நிர்மாண பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது.
இதனால், பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கட்டட நிர்மாணத் தொழிற்துறையினர் கோரியுள்ளனர்.