அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 சதவீதத்தால் அதிகரிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளில் 128,000 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஐ.டீ. கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் 4 கோடியே 44 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் செலுத்துவதற்கு தகுந்த வாகனங்களை மாத்திரம் செலுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் நிலவும் அதிக வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.