வருமான வரி செலுத்தும் காலக்கெடு நிறைவு ; வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைகின்றது.
நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் கூட்டாண்மை வருமான வரிக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதன்கீழ் தங்களது வரிப் பணத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

வரி செலுத்துவதற்கு உட்பட்ட, இதுவரை வரிகளைச் செலுத்தாத தனிநபர்கள் மற்றும் வணிகங்க நிறுவனங்கள் இன்றைய தினத்திற்குள் தங்களது வரிகளைச் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக அபராதம் மற்றும் வட்டி சுமத்தப்படும் என்றும் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
வரிக் கொடுப்பனவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் வரி செலுத்தல் இணையதளம் வழியாகவோ அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் நேரடியாகவோ செலுத்த முடியும்.