அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் தொடர்பில் வெளியானத் தகவல்
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்றைய தினம் (23.12.2023) ஆம் திகதி சுமார் 40% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த (22.12.2023) ஆம் திகதி 140,791 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்ததாகவும் இதன் மூலம் சுமார் 46,457,600 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த (23.12.2023) ஆம் திகதி சுமார் 145,503 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் அதன் ஊடான வருமானம் சுமார் 50,174,550 ரூபாவாகும்.
கடந்த (23.12.2023) ஆம் திகதி பெறப்பட்ட வருமானமே இதுவரை நெடுஞ்சாலைகளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் எனவும், இது ஒரு சாதாரண நாளின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 40% அதிகரிப்பு எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.