புத்தாண்டு நாளில் நடந்த அசம்பாவிதம் ; இரண்டு வயது குழந்தை உள்ளிட்ட இருவர் மரணம்
புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று (2024.04.14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. புஸ்ஸல்லாவ - ஹெல்பொட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே திரும்பி வரும் வழியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில், 2 வயதுக் குழந்தையும் 70 வயது முதியவரும் உயிரிழந்ததாகவும், விபத்தின் போது மொத்தம் 10 பேர் வானுக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.