மதுபோதையால் நடந்த கோர விபத்து ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்ளிட்ட ஐவர் காயம்
சிலாபம் மாரவில பகுதியில் காரொன்றும் வேனொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை, பெண் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை மாரவில பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு செல்லும் வழியில் இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கு முன்னர், மாரவில பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு சென்ற போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றவர் மதுபோதையில் இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.