கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு

Sri Lanka Railways Accident Death
By Sulokshi Nov 16, 2024 04:47 AM GMT
Report

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு | Including 2 From Same Family Die Horrific Accident

 உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அனர்த்தம்

இவர்கள் தெலிஜ்ஜவில கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், காலி பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

ரயிலுக்கான சமிஞ்ஞை ஒளிரும் வேளையில் ரயில் வருவதாக அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதியான 34 வயதான நபரும் அவரது 80 வயதான தாத்தாவுமே உயிரிழந்தனர் விபத்தில் காயமடைந்த உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

இதேவேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுக் குழுவினரை ஒருத்தர் மிச்சமில்லாமல் தூக்கி வீசிய மக்கள்!

ஒட்டுக் குழுவினரை ஒருத்தர் மிச்சமில்லாமல் தூக்கி வீசிய மக்கள்!

நேற்று (15) பிற்பகல் ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை பெல்லங்கடவல கிளை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கினிஹிரிகம, கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US