முல்லைத்தீவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்திய சம்பவம்
முல்லைத்தீவு குமுழமுனையினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் கஜீவன் என்ற சிறந்த இளம் புகைப்படப்பிடிப்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று படப்பிடிப்பில் இருந்த நிலையில் குறித்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்திற்கு உள்ளான நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கஜீவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றின் போது திடீரென மயங்கிவீழ்த அவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞர் சிறு வயதிலே சிறந்த புகைப்பட கலைஞனாக திகழ்ந்தவர் என கூறப்படும் அதேவேளை, முல்லைத்தீவு குமுழமுனையில் புகைப்பட கலையகம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.