இலங்கையில் டெஸ்ட் போட்டியின் போது அதிர்ச்சி சம்பவம்: தீவிர சிகிச்சை பிரிவில் வீரர்
இலங்கை அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்து களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் பட்டதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போட்டியின் 23வது ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன (Dimuth Karunaratne) அடித்தாடிய பந்து சோர்ட் லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஜெரமி சொலோசனோவின் தலைக்கவசத்தில் பட்டதில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போட்டியில் காயமடைந்த வீரர் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜெரமி சொலோசனோ (Jeremy Solozano) டெஸ்ட் வாய்ப்பைப் பெற்ற முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
?Injury Update ? Debutant Jeremy Solozano was stretchered off the field after receiving a blow to his helmet while fielding.
— Windies Cricket (@windiescricket) November 21, 2021
He has been taken to the hospital for scans. We are hoping for a speedy recovery ??#SLvWI pic.twitter.com/3xD6Byz1kf