புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட சென்ற ஆய்வாளருக்கு நேர்ந்த சம்பவம்! கைது செய்த பொலிஸார்
பம்பலப்பிட்டி கின்ரோஸ் பகுதியில் கடற்பரப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட சென்ற கடல் உயிரியல் ஆய்வாளர் கலாநிதி ஆசா டி வொசை முடக்கல் நிலையில் பயணம் செய்ததாக தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடல் உயிரியல் ஆய்வாளர் கலாநிதி ஆசா டி வொசை இதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை பார்வையிடுவதற்காக கின்ரோஸ் கடற்கரைக்கு தந்தையுடன் சென்றபோது, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்து தன்னை கைதுசெய்தார்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
தேசிய பூங்காவிற்கும் படகு சவாரிக்கும் செல்பவர்களிற்கும் வேலைக்கும் செல்பவர்களிற்கும் இங்கு ஒரே சட்டம் என எனக்கு தெரிவிப்பவர்களிற்காக நான் இதனை நான் பகிர்ந்துகொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நான் கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட சென்றேன் அது எனது பணி என சுட்டிக்காட்டிய அவர், நான் பொழுதுபோக்கிற்காக அங்கு செல்லவில்லை என்றும் ,கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்பகளை மதிப்பிடவே சென்ரதாகவும் அவர்பதிவிட்டுள்ளார்.
