இலங்கை கல்வித்துறைக்கே இழுக்கு; கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியைகள் நால்வர் அதிரடி பணி நீக்கம்!
கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு இடையிலான முறையற்ற தொடர்பு குறித்த காணொளிகள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியின் மாணவர் தலைவராக (Head Prefect) பணியாற்றும் 19 வயதுடைய மாணவர் ஒருவர், தனது கல்லூரியைச் சேர்ந்த நான்கு ஆசிரியைகளுடன் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளார்.

அந்தரங்க காணொளி அழைப்புகள்
இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணப் பரிமாற்ற சந்தேகம்-அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சைபர் குற்றத்தடுப்பு பிரிவு-காணொளிகள் கசிந்த விதம் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையின் சைபர் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.