இணையமூடாக தகாத தொழில்; பெண்கள் உட்பட ஐவர் கைது; உரிமையாளரை சிக்கவைத்த எலிகள்!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி, இணையத்தின் ஊடாக மசாஜ் நிலையம் எனும் பெயரில் தகாத தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாரச்சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் குறித்த நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு 4 பெண்கள் மற்றும் அங்கு பெண் ஒருவரின் சேவையைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் 30 - 37 வயதுக்கு இடைப்பட்ட மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர். இதன்போது விடுதியின் முகாமையாளர் எனக் கூறப்படும் பெண், கட்டிடத்தின் பின்னால் உள்ள ஒரு பகுதியில் பதுங்கி முயன்றபோது அப்பகுதியில் இருந்துள்ள எலிகள் அவரை கடித்ததால் சத்தமிட்டு வெளியே ஓடி வந்த போது சிக்கியததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்களை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் , கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சுற்றிவளைப்பை கொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதன பொலிஸ் பரிசோதகர் சுபாஷன வன்னி ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய, ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.