யாழில் உள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்ற யோசனை முன்வைப்பு!
யாழ்.குடாநாட்டிலுள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்ற யோசனை முனவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையினை பிரபல நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உத்திக பிறேமரத்ன நேற்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.
இவ்வாறும் அமைக்கப்படும் தீவை பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் எனதெரிவித்த அவர், இது இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியையும் தீர்க்க உதவும் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தை போன்று ஒரு நிலப்பரப்பை உருவாக்கி கடல் ஓரமாக மிருகக்காட்சிசாலையை அமைக்கவும் உத்திக பிறேமரத்ன ஆலோசனை வழங்கினார்.
இதன் மூலம் கடலால் சூழப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட மிருகக்காட்சிசாலையை நிறுவிய முதலாவது நாடாக இலங்கை மாறும் எனவும் , அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் எனவும் அவர் நாடாளும்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.