ஐந்து வருடத்தில் 25 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி!
இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 25,15,546 என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகன இறக்குமதிக்காக 1,239 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு இன்று பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு 103 நாடுகளிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அந்தவகையில் 2015 இல் 647,444 வாகனங்கள், 2016 இல் 469,304 வாகனங்கள், 2017 இல் 460,201 வாகனங்கள், 2018 இல் 494,488 வாகனங்களும், 2019 இல் 344,059 வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.