இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
வரியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிக எஞ்சின் திறன் கொண்ட நான்கு அசெம்பிள் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் வாரியபொல பொலிஸ் பிரிவின் ஹம்மாலிய பகுதியில் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் வாரியபொல பண்டார, கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த உயர் எஞ்சின் திறன் கொண்ட அசெம்பிள் செய்யப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களில் போலியான எண் தகடுகள் இணைக்கப்பட்டிருந்தமையும் , அவற்றில் ஒன்று பதிவு செய்யப்படவில்லை என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.