உதிரிபாகமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் சிக்கியது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்கள் எனக் கூறி துபாயிலிருந்து குறித்த சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களம் கூறியுள்ளது.
4 கோடி பெறுமதியான கார்கள்
4 கோடி பெறுமதியான கார்கள் இரண்டும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், 18 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானம், எண்ணெய் வகை மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன அடங்குவதாகவும்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் 40 அடி கொள்கலனில் கொண்டுவரப்பட்டிருந்தன.
கொழும்பு கோட்டை சத்தம் வீதியில் உள்ள ஒரு நிறுவன முகவரிக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.