இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உப தலைவர் ஆ. தீபன் திலீசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நாளை திட்டமிட்டபடி தொண்டமனாறு பரீட்சை நடைபெறும் என வட மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
திங்கள், வெள்ளிக் கிழமைகளில் பாடசாலைகள் இல்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து பரீட்சைகளையும் பிற்போடுமாறு ஏற்கனவே கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை நாளை வடமாகாண போக்குவரத்து சேவையினர் பகிஸ்கரிக்கின்றனர்.ஆனால், மாணவர்கள் வரமுடியாது விட்டாலும் பரவாயில்லை, தொண்டமனாறு வெளிக்கள நிலையம் என்ற பெயரில் நடக்கும் தனியார் பரீட்சை மூலம் பணம் கறப்போரின் முயற்சிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில், காப்பாளராக செயற்படும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
நாளைய பரீட்சை தொடர்பாக எந்தவொரு அதிகாரியின் ஒப்பத்துடன் எழுத்து மூல ஆவணமோ அல்லது வடமாகாண கல்வி திணைக்களத்தின் எந்த பதவி நிலை உத்தியோகத்தர் இந்த செய்தியை வெளியிட்டார் என்றோ குறிப்பிடாமல், வடமாகாண கல்வித்திணைக்களம் என்று மட்டுமே செய்தி வெளிவந்துள்ளது.
உத்தியோகபூர்வமாக ஒப்பத்துடன் எழுத்து மூல ஆவணம் வெளியிடப்படும் வரை இதனை உத்தியோக பூர்வ தரவாக எந்தவொரு அதிபரோ ஆசிரியரோ மாணவர்களோ கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.