இலங்கைக்கு வந்துள்ள முக்கியஸ்தர்!
USAID நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் (Samantha Power) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பிலும் அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பிலும் அவருடைய பயணத்தின் போது ஆராயப்படும் என்று அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் சமந்தா பவரின் (Samantha Power) பயணத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார் என்றும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சமந்தா பவர் (Samantha Power) இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.