இன்று இலங்கைக்கு வரும் முக்கியஸ்தர்!
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சு வார்த்தையின் ஏற்பாட்டாளராக அவர் செயல்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.