பிரான்ஸிற்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸிற்கு சுற்றுலா வருவோர், உள்ளூர் ஓட்டுநர் விதிகளை நன்கு அறிந்துவைத்திருப்பது நல்லது என ஒரு முன்னெச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டுள்ளது,
குறிப்பாக, வாகன சாரதி, பிரான்ஸின் 12 நிரந்தர குறைந்த மாசு மண்டலங்களில், நடைமுறையில் உள்ள விதிகளின்படி நடந்துகொள்ள வேண்டும்.
விதி மீறுவோருக்கு குறைந்தபட்ச அபராதத்தொகை 68 யூரோக்கள் விதிக்கப்படும். இந்த தொகை மேலும் அதிகரிக்கலாம்.
வாகன சாரதிகள் தங்கள் வாகனத்தின் முன் பக்கக் கண்ணாடியில், புகை வெளியீட்டு அளவைக் காட்டும், Crit’Air sticker என்னும் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டவேண்டும் அதன் விலை 4.61 யூரோக்கள் ஆகும்.
மேலும் பிரான்ஸில், பாரிஸ், Strasbourg, Lyon, Marseille, Toulouse, Nice, Montpellier, Grenoble, Rouen மற்றும் Reims ஆகிய நகரங்கள் குறைந்த மாசு மண்டலங்களில் அடங்கும்.
நீங்கள் பிரான்ஸுக்குப் பயணம் செய்கிறீர்கள் என்றால், முன்கூட்டியே Crit’Air ஸ்டிக்கரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மற்றுமொரு முக்கிய விடயம், உங்கள் வாகனத்தில் ஸ்பீட் டிடெக்டர் இருந்தால், அதை பிரான்ஸுக்குள் நுழைவதற்கு முன் செயலிழக்கச் செய்துவிடவேண்டும்.
பிரான்ஸில் இந்த டிடெக்டர்களை பயன்படுத்தினால், உங்களுக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன்களை அணிந்திருப்பது, வாகனம் பழுதடைந்து வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருக்கும்போது ஒளிரும் உடையை அணியாமல் இருப்பது ஆகிய விடயங்களும் அபராதம் விதித்தலுக்கு வழிவகை செய்யும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.