வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
வாகன தண்டப்பணம் செலுத்துவதற்கான நிவாரணக் காலம் நவம்பர் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து இடம்பெறும் குற்றங்கள் தொடர்பிலான வாகன அபராத பற்றுசீட்டிற்கு நவம்பர் 14 ஆம் திகதி வரை மேலதிக தண்டப்பணம் அறிவிக்கப்படாது என்றும், அதன்பின் 28 நாட்கள் வரையிலான வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு மேலதிக தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், நவம்பர் 1ம் திகதி முதல் வாகன அபராதம் வழக்கம் போல் 14 நாட்களுக்கு வசூலிக்கப்படும் என்றும், 28 நாட்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், 28 நாட்களுக்கு பிறகு பெறப்படும் வாகன அபராதம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.