கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை, மண்மேடு சரிந்த இடத்தில் மேலும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் பிரதான வீதியில் மண் அகற்றும் பணி சற்று தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து வரும் வாகனங்கள் லக்ஷபான நோர்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கண்டியிலிருந்து வரும் வாகனங்கள் நாவலப்பிட்டி திம்புலபதன தலவாக்கலை வீதியை பயன்படுத்த முடியும்.
மேலும், தெனியாய இரத்தினபுரி வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்துள்ளது.
அணில்கந்த பகுதியில் 86 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வீதியில் மண் மேடு சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.