பொதுமக்களுக்கு எரிசக்தி அதிகார சபை விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
நாட்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதற்கு நுகர்வோரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் விஜேந்திர பண்டார தெரிவித்துள்ளார்.
மின்சாரத் தேவையை முறையாக முகாமைத்துவம் செய்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால், தற்போதைய மின்சார நெருக்கடியை இலகுவாகக் கையாள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில், மின்சாரப் பயன்பாட்டின் போது நுகர்வோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கின்றது.
இந்த காலப்பகுதியில் மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எரிபொருளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.