உடன் நிறுத்துங்கள்; லிட்ரோ, லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!
லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எழுத்து மூல அறிவித்தல்.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கான உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் லசந்த அழகியவண்ண உத்தரவிட்டுள்ளார்.
எத்தில் மெர்காப்டனின் வாசனை அளவு 14 ஆக உயரும் வரை விநியோகத்தை நிறுத்துமாறு இரண்டு எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக Litro Gas நிறுவனம் இன்று காலை அறிவித்துள்ளது.