உதய கம்மன்பில வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் புதிய அரசியல் கூட்டணி குறித்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறிய அணியுடன் பேச்சு நடத்தப்படும் என்று சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் (31-08-2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, மேற்படி சுயாதீன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், டலஸ் அழகப்பெரும, (Dullas Alahapperuma) பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) உள்ளிட்ட 13 பேர் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் மொட்டு கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதால் அவர்களுடன் பேச்சு நடத்தப்படும்.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சுயாதீன அணிகள் இணைந்து விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தலைமையில் எதிர்வரும் 04 ஆம் திகதி புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளன.
அந்த கூட்டணியில் டலஸ் அணியை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை, டலஸ் அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) அழைப்பு விடுத்துள்ளார்.