பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையானது எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவுடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் தான் தெரிவாகியுள்ள பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகள் தொடர்பில் அறிந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, அவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 41,000 க்கும் அதிகமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.