சொந்த ஊரிலிருந்து மீண்டும் கொழும்பு திரும்பும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

Sinhala and Tamil New Year Colombo Sri Lankan Peoples Srilanka Bus
By Sahana Apr 15, 2026 05:06 PM GMT
Report

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், தற்போது மீண்டும் கொழும்பை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

சர்வதேச மாணவர்களுடன் இலங்கை வந்த பாய்மரக் கப்பல்

சர்வதேச மாணவர்களுடன் இலங்கை வந்த பாய்மரக் கப்பல்

இதற்கமைய, பயணிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒரு முறையான திட்டத்தின் கீழ் இன்று (15) முதல் பேருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த விசேட பேருந்து சேவைகள் வரும் 20ஆம் திகதி வரை தொடரும் என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

சொந்த ஊரிலிருந்து மீண்டும் கொழும்பு திரும்பும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு | Important Announcement For People Returning Home

பயணிகளின் தேவை இருப்பின், 20ஆம் திகதிக்கு பின்னரும் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு மக்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளை (16) முதல் நாடு முழுவதும் சுமார் 50 சதவீத தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பயணிகளின் வருகை தற்போது குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொலைதூரச் சேவைகள் உட்பட சுமார் 7,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து சேவைகளும் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்றும் கூறினார்.

ரயில் சேவைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க, நாளை (16) முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இயங்கும் எனத் தெரிவித்தார்.

முக்கிய ரயில் சேவைகள் பற்றிய விபரங்கள்

சாகரிகா ரயில்: நாளை (16) மற்றும் 17ஆம் திகதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு பெலியத்தவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும்.

மாலை வேளைகளில் கொழும்பு கோட்டையிலிருந்து வழக்கமான நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

ருஹுணு குமாரி மற்றும் காலு குமாரி: மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேர அட்டவணைப்படி புறப்படும்.

அதேபோல் காலி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.15, 4.00, 4.10, 5.00 மற்றும் 5.15 மணி என ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை கொழும்பு கோட்டை நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், நாளை காலை முதல் மஹவ, கணேவத்த, குருணாகல், ரம்புக்கணை மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களிலிருந்தும், சிலாபத்திலிருந்து இரண்டு ரயில்களும், அவிசாவளையிலிருந்து மூன்று ரயில்களும், கொஸ்கமையிலிருந்து ஒரு ரயிலும் கொழும்பு நோக்கி இயக்கப்பட்டு, மாலை வேளைகளில் அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு நழுவிப்போன காதலனை தேடி அமெரிக்கா சென்ற 86 வயது பிரெஞ்சு மூதாட்டி கைது

60 ஆண்டுகளுக்கு முன்பு நழுவிப்போன காதலனை தேடி அமெரிக்கா சென்ற 86 வயது பிரெஞ்சு மூதாட்டி கைது

மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US