விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Sri Lankan Peoples Sri Lanka Government Rice
By Viro Feb 06, 2025 01:28 PM GMT
Viro

Viro

Report

 நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தற்போதைய கட்டுப்பாட்டு விலை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 கட்டுப்பாட்டு விலை

எனினும் அதிகரித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், “நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Important Announcement For Farmers

கடந்த ஓரிரு மாதங்களில் சந்தையில் திட்டமிட்ட வகையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காகவே அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நுகர்வோர் அதிகார சபை விதித்தது. விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பச்சை அரிசியின் சில்லறை விலை ரூ. 210 , நாட்டு அரிசியின் விலை ரூ. 220, சம்பா அரிசியின் விலை ரூ. 230 என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த என்னைப் பழிவாங்குகிறார்கள்: மஹிந்த குமுறல்

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த என்னைப் பழிவாங்குகிறார்கள்: மஹிந்த குமுறல்

அதேபோன்று தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ பச்சை அரிசியின் விலை ரூ. 220, நாட்டு அரிசியின் விலை ரூ. 230, சம்பா அரிசியின் விலை ரூ. 240, கீரி சம்பாவின் விலை ரூ. 260 என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான உத்தரவாத விலை ரூ. 120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான நெல் ஆலைகள் தற்போது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படுகின்றன. பெரும்போக விவசாயத்தில் அதிகளவான நெல்லை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US