பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்
இந்தியாவில் மனைவி குளிப்பதை ரகசியமாக வீடியோ பதிவு செய்த இளைஞனை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவிக்கையில்,
இந்தியா குஜராத்தில் ஒரு பெண் குளிப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு வாலிபர் தன்னுடைய செல்போனில் படம் எடுத்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இளைஞனின் மிரட்டலை அந்தப் பெண் தனது கணவரிடம் சொல்லி விடவே இருவரும் சேர்ந்து அந்த வாலிபரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி அந்த இளைஞனை வீட்டுக்கு வரவழைத்த அந்த பெண்ணும், கணவரும் இளைஞனை கொலை செய்திருக்கிறார்கள்.
மேலும் அவரது செல்போனை உடைத்து சாலையில் வீசியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை பொலிஸார் வலைவவீசி தேடிவருவதாக கூறப்படுகின்றது.