முக்கிய பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் - இன்று நள்ளிரவு முதல் நடைமுறையில்..
வாகன உதிரிப்பாகங்கள் உட்பட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நீக்கப்படவுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, 1,465 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. எனினும் தற்போது நாட்டின் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட பொருட்களில் சிலவற்றிற்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.