நடிகர் தளபதி விஜய் குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
நடிகர் விஜய் தான் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நுழைவு வரி செலுத்த மறுத்து வழக்கு பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவரிடம் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
பின் விஜய் ரூ.40 லட்சம் நுழைவு வரியை செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை விஜய் செலுத்திவிட்டதாக தமிழக அரசு உயர்நிதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
மேலும் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நிதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.