எரிபொருள் விநியோகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்!
நாட்டில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி இன்று முதல் நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாகனத்தின் இலக்கத்தகட்டில் உள்ள எண்ணையும், தேசிய எரிபொருள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இலக்கத்தையும் சரிபார்த்து எரிபொருளை விநியோகிக்குமாறு சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை 1140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மற்றும் கூப்பன் ஆகிய முறைமைகளில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை வருமான வரி பத்திரம் மூலம் பதிவு வாகன செஸி இலக்கத்தின் மூலம் QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்கள் வருமான அனுமதி பத்திரம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.