பரீட்சையில் ஆள்மாறாட்டம்; தம்பிக்காக வந்து சிக்கிய அண்ணன்!
தன்னுடைய மூத்த சகோதரனுக்காக பரீட்சையில் தோற்றிய அவருடைய அண்ணா கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, தெனியாய பல்லேகம வித்தியாலயத்தில் பரீட்சை மண்டபத்திலேயே சந்தேகநபர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இந்நிலையில் சிங்கள பாட பரீட்சையில் விடையளிப்பதற்கு தயாராக இருந்த நேரத்திலேயே நிலைய பொறுப்பதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கள பாட பரீட்சை
தெனியாய, எனசல் வத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கைதான சந்தேகநபர், தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் சகோதரர் தமிழ் மூலமான பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக இம்முறை தோற்றிய நிலையில் அவருடைய இரண்டாம் மொழியான சிங்கள பாட பரீட்சைக்கே, சந்தேகநபர் தோற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.