தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்தில் சிக்கிய மின்சார சபை ஊழியர்கள் ; 10 பேர் படுகாயம்
பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
பாணந்துறை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் குழுவினர் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதிய வேகத்தில் குறித்த லொறியும் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் பயணித்த மின்சார சபை ஊழியர்களே இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
சம்பவம் தொடர்பில் அதிவேக வீதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.