இலங்கைக்கு 2.9 பில்லியன் கடனுதவி வழங்க IMF ஒப்புதல்!
இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை, கடனுதவிக்கான மூன்றாவது தவணையை வழங்க அனைத்துலகப் பண நிதியம் ( IMF) (நவம்பர் 23) ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், இலங்கையின் பொருளியல் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என IMF எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
IMF வெளியிட்ட அறிக்கை
மூன்றாவது கடன் தவணையாகக் கிட்டத்தட்ட 333 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கயிருப்பதாக ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த தவணையுடன் சேர்த்து கிட்டத்தட்ட $1.3 பில்லியன் அமெரிக்க டொலரை பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடான இலங்கைக்கு அதிலிருந்து மீண்டுவர கடனுதவியாக அளித்திருப்பதாக IMF மேலும் கூறியுள்ளது.
அதேசமயம் இலங்கையில் பொருளியல் மீட்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் IMF தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணைக்கு இன்று (23) அனுமதிஅளிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.