லண்டனில் கணவர் பிள்ளைகளை விட்டு காதலனை தேடி கனடா சென்ற ஈழத் தமிழ் பெண்; கடைசியில் நேர்ந்த கதி
கணவர் மற்றும் இரு பிள்ளைகளை லண்டனில் தவிக்கப்பவிட்டு , பாடசாலை கால காதலனை தேடி , கனடா சென்ற 42 வயதான ஈழத்தை பின் புலமாக கொண்ட குடும்ப பெண் ஒருவர் மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள CMHA யில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் பாடசாலை பருவத்தில் காதலால் வீட்டை விட்டு வெளியேறி நிலையில் , பின்னர் பெற்றோரால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு கொழும்பு சென்று அங்கு உயர் கல்வி கற்றுள்ளார்.

மதுபோதைக்கு அடிமையாகிய பெண்
அதன் பின்னர் லண்டனில் கல்வி கற்று தொழில் புரிந்து வந்த தமது உறவுக்காரனான ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். லண்டனில் இரு பிள்ளைகளுக்கு தாயாகி வாழ்க்கை மிகவும் அழகான சென்ற நேரத்தில், சமூகவலைத்தளம் ஊடாக கனடாவில் வசிக்கும் பழைய காதலனுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
42 வயதான கனடாவில் வசித்து வரும் 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் காதலனுடன் வாழ லண்டனிலிருந்து கனடாவுக்கு கடந்த வருட தொடக்கத்தில் குறித்த பெண் சென்றதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் கணவனின் கள்ளக்காதல் செயற்பாடுகளை அவனது மனைவி கண்டு பிடித்து சண்டை தொடங்கியதால் காதலியை, குடும்பஸ்தர் கைகழுவி விட்டதாகத் தெரியவருகின்றது.
காதலனால் ஏமாற்றப்பட்டதால் மதுபோதைக்கு அடிமையாகிய பெண், மனநலன் குன்றிய நிலையில் தற்போது ரொறொன்ரோ பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக பெண்ணின் உறவுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், லண்டனில் உள்ள பிள்ளைகள் தமக்கு தமது தாயார் வேண்டாம் என உறவினர்களுக்கு கூறியதாகவும் தெரியவருகின்றது.
நல்லதொரு குடும்பம் கிடைத்தும் தகாத உறவால் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.