சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகளுடன் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களும் 25 வயதுடைய இளைஞன் ஆவர்.
சந்தேக நபர்கள் மூவரும் டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை 04.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் மூவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 559 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 80 டெப் கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 6 கோடியே 20 இலட்சம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.