சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சொக்லட்டுக்கள்
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சொக்லட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சாக்லட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சொக்லட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக உணவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.